ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திரும்பப் பெறக்கோரியும் , தொழிலாளர் மாநாட்டை கூட்டவும்பெட்ரோலியப் பொருட்களின் விலையை சர்வதேச மார்க்கெட்டில் குறைந்துள்ளதன்படி பெட்ரோல் டீசல் விலையை குறைத்திட கோரியும்,ஆட்டோ, தரைக்கடை, சுமைப்பணி, கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுனர்கள் உள்ளிட்ட 50 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்க கோரியும்,100 நாள் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்தை திரும்ப பெற கோரியும்,விதைச் சட்டத்தை திரும்ப பெற கோரியும்.மின்சார சட்டத்திருத்தம் Santhi Bill - 2025 -ஐ திரும்ப பெற வேண்டியும்,இன்சூரன்ஸ்,அந்நிய மூலதனம் 100 % அனுமதியை திரும்ப பெற வேண்டியும்,குறைந்தபட்ச சம்பளம் ரூ. 26,000/- வழங்க கோரியும்.,திட்டப்பணியாளர்களான அங்கன்வாடி, மக்களை தேடி மருத்துவம், ஆஷா ஊழியர்களை காலமுறை ஊதியம் தீர்மானித்து நிரந்தரப்படுத்த வேண்டியும்,அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் - SKM பிப்ரவரி:12ம் தேதிஅகில இந்திய அளவில்பொது வேலை நிறுத்தம் செய்யவும்வியாழக்கிழமை காலை 10.30 மணிரயில் மறியல் செய்யமத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலையிலிருந்து பேரணியாக சென்று ரயில்வே ஐங்ஷனில் மறியல் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட நிர்வாகிகள்:S.ஜோசப் நெல்சன்S.ரெங்கராஜன் CITUக.சுரேஷ் AITUCஅயிலை. சிவசூரியன்S.இளையராஜா AICCTUN.ஞானதுரை MosK.வெங்கட் நாராயணன் INTUCS.தெய்வீகன்யR.சிவசெல்வன் urucதொழிலாளர்கள், விவசாயிகள் பெருந்திரளாக திரண்டு ஆர்பாட்டம் செய்து ஒன்றிய எதிர்த்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து. முழக்கமிட்டனர்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும் கலந்து கொண்டு பெரும் திரளாக திருச்சி பேருந்து நிலைய பெரியார் சிலை அருகில் ஆர்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க பிரதிநிதிகள் ஆர்பாட்டத்தில் பேசியதாவது
ஒன்றிய அரசு இந்த ஆண்டு ஏராளமான புதிய சவால்களை உழைக்கும் மக்களுக்கு எதிராக விதைத்துள்ளது. மேலும் தொழிலாளி வர்க்கத்திற்கு போராட்டம் மிகுந்த ஆண்டாகவும் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருக்கும் என்பது திண்ணம். தொழிலாளி வர்க்கம் நூறாண்டுகள் போராடி, எண்ணற்ற உயிர்த் தியாகத்தினால் பெற்ற 29 தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு முழு முற்றாக பறித்து 4 சட்ட தொகுப்புகள் என்ற பெயரில் நவம்பர் 21ம் தேதி அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மட்டுமே தனது கொள்கையாக கொண்டுள்ள மத்திய அரசு 4 சட்ட தொகுப்புகளை நிறைவேற்றியதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.
தொழிலாளர்களுக்கு நூறாண்டுகளுக்கும் மேல் கிடைத்து வந்த சட்ட ரீதியான குறைந்த பட்ச பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பலன்கள் துடைத்து எறியப் பட்டுள்ளது. ஆனால் தேசத்தின் ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் தொழிலாளர்களுக்கு வசந்த
காலம் பிறந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
4 சட்ட தொகுப்புகள் சொல்வது என்ன? என்பதை பற்றி கூறியதுதாவது,
1) ஊதிய தொகுப்பு சட்டம் (Wage Code 2019) இதில் 4 சட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
2) தொழில்துறை உறவுகள் தொகுப்புச் சட்டம் (Industrial Relations Code 2020 ) இதில் 3 சட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
3) சமூக பாதுகாப்பு தொகுப்பு சட்டம் (Social Security Code 2020 )இதில் 9 சட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
(4) பணியிடத்தில் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச் சட்டம் (Occupational Safety, Health & Working Conditions Code 2020) 2 SPE 1976 13 சட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிடப்பட்ட 4 சட்ட தொகுப்புகள் வாயிலாக ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் நல சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த குறைந்த பட்ச நிவாரணங்களை நிர்மூலம் ஆக்கியுள்ளது ஒன்றிய அரசு.இழப்புகளும், ஆபத்துகளும்தொழிலாளி என்ற அடையாளம் அழிக்கப்படுகிறது.சங்கம் சேரும் உரிமை மறுக்கப்படுகிறது. தொழிற்சங்க அங்கீகாரம் கேள்விக்குள்ளாகிறது.*கூட்டு பேர உரிமை பறிக்கப்படுகிறது.
வேலை நிறுத்தம் சட்ட விரோதம், மீறினால்|| அபராதம் மற்றும் கைது.
1 நாள் வேலை நிறுத்தத்திற்கு 6 நாள் சம்பள வெட்டு,PF பிடித்தம் 12 ல் இருந்து 10 சதமாக குறைப்பு.நிறுவனம் அரசிடம் முறையிட்டால் PF/ ESI திட்டத்திலிருந்து விலக்கு.
தொழிலாளர் நீதிமன்றம் செயல்படாது.
தொழிலாளர் தீர்ப்பாயம் பலவீனமாக்கப்படுகிறது.
தொழிலாளர் ஆய்வாளர் எந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பறிப்பு.
300 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் நிறுவனங்களை மூட அரசு அனுமதி தேவை இல்லை
8 மணி நேரம் வேலை 12 மணி நேரமாக அதிகரிப்பு, குறைந்த பட்ச ஊதியம் உத்தரவாதம் இல்லை.
Fuad Term Emply FTE) என்ற பெயரில் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் காண்ட்ராக்ட் முறையில் நிரந்தாமற்ற வேலை என இது போன்ற எண்ணற்ற பாதிப்புகளை உள்ளடக்கியதாக இந்த 4 சட்ட தொகுப்புகளும் உள்ளதாய் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் நமது அகில இந்திய சம்மேளனம் FMRAI உட்பட்ட 70 தேசிய சம்மேளனங்கள், மத்திய அரசு இந்த & சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெறும் வரை நாடு தழுவிய அளவில் தொழிலாளர்களை திரட்டி தொடர் இயக்கங்களையும் போராட்டங்களையும் நடத்திக் கொண்டு உள்ளது. இதன் அடுத்த கட்ட முக்கிய இயக்கமாக பிப்ரவரி 22 அன்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் நாடு தழுவிய அகில இந்திய வேலைநிறுத்தம் திட்டமிடப் பட்டுள்ளது.
மருந்து விற்பனை பிரநிநிதிக்கு பாதிப்பு
1976ம் ஆண்டு ஜனவரி 25 அன்று விற்பனை அபிவிருத்தி பணியாளருக்கு என பிரத்தியேகமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது SPE சட்டம் ( Sales Promotion Employees Conditions of Service A 197 .இந்த சட்டம் 4 சட்ட தொகுப்புகள் அமலாக்கம் வாயிலாக பறிக்கப்பட்டுள்ளது. மருந்து விற்பனை பிரதிநிதிக்கு கிடைத்து வந்த சட்ட பாதுகாப்பு மற்றும் பலன்கள் அனைத்தும் நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளது.
மருந்து விற்பனை பிரதிநிதிக்கு சட்டப்படி வழங்கும் பணி நியமன ஆணை, குறைந்த பட்ச ஊதிய உத்தாவாதம்.விடுப்பு எடுக்கும் உரிமை, தொழிலாளி என்ற அங்கீகாரம். 8 மணி நேர வேலை சட்டம், PF சட்டம். Gratuity சட்டம், சம்பள பட்டுவாடா சட்டம். தொழில் தகராறு சட்டம், மகப்பேறு ஈட்டம் உட்பட்ட அனைத்து சட்ட பலன்களையும் SPE சட்டம் 1976 ஐ பறித்த தன் மூலம் நீர்த்துப் போகச் செய்துள்ளது மத்திய அரசு
புதிய சட்ட தொகுப்புகள் வாயிலாக TIXED TERM EMPLOYMENT என்ற பெயரில் நமது பணியை முற்றிலும் CONTRACT மயமாக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி நமது பணிக்காலம் 11 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் சூழல் ஏற்படும். இது பணி நிரந்தரம் மற்றும் PF.GRATUITY LEAVE RULES மற்றும் பல சட்ட ரீதியான பலன்களையும், 58 முதல் 60 வயதில் பணி ஓய்வு என்ற பாதுகாப்பையும் நம்மிடம் இருந்து பறிக்கிறது. நமது துறையில் Glenmark, IPCA. KAPL, Hindustan போன்ற நிறுவனங்களும் 1 மாத காண்ட்ராக்ட் முறையை புகுத்த தொடங்கியுள்ளன.
பல்லாயிரக்கணக்கான மருந்து விற்பனை பிரதிநிதிகள் பல ஆண்டுகள் தொடர் போராட்டத்தின் விளைவாக பெற்ற STE சட்டம் 1976 கடந்த 50 ஆண்டுகளாக நமக்கு பெரும் பாதுகாப்பை வழங்கி வந்தது. நமக்கான வேலை பாதுகாப்பு மற்றும் அனைத்து சட்ட ரீதியான பலன்களையும் தொடர்ந்து பெறுவதற்கும். SPE சட்டம் 1976 ஐ திரும்ப பெற்றிடவும். பாதுகாத்திடவும் மத்திய அரசை எதிர்த்து தொடர் இயக்கங்கள், பிரச்சாரங்கள் மற்றும் வேலை நிறுத்தம் உட்பட்ட போராட்டங்களை நாம் சக்தியான பங்கேற்புடன் நாடு தழுவிய அளவில் நடத்த உள்ளோம். நமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட நாம் போராடி பெற்ற SPE சட்டம் 1976 உள்ளிட்ட தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாத்திட பிப்ரவரி 12 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் நமது மாநிலத்தில் பணி புரியும் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் அனைவரும் முழுமையாக பங்கேற்று வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
வரும் காலங்களில் FMRAI மற்றும் TNMSRA அறைகூவல் விடுக்கும் அனைத்து போராட்ட இயக்கங்களிலும் சக்தியாக அணி திரள்வோம்!
நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்!
2026ம் ஆண்டு போராட்டங்களின் ஆண்டாக மலர்ந்துள்ளது. கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எழுச்சியும், வீறு கொண்ட போராட்டமும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். மத்திய அரசு அமல்படுத்திய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர்., தெரிவித்தனர்

No comments:
Post a Comment